"எனக்கு 30, அவளுக்கு 12".. அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சால் சர்ச்சை..!

0 4058

30 வயதில் 12 வயது சிறுமியுடன் நட்பு வைத்திருந்ததை எனக்கு 30, அவளுக்கு 12 என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தது இணையதளத்தில் விவாத பொருளாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய ஆசிரியர்கள் கூட்டமைப்பான தேசிய கல்வி சங்கம் சார்பில் வாசிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ஒரு பெண்ணை அடையாளம் கண்டுகொண்டு சுட்டிக்காட்டி பேசினார்.

அந்த பெண் 12 வயது சிறுமியாக தனக்கு 30 வயதானதாகவும், அப்போது அவருடன் நட்பு பாராட்டியதாகவும் குறிப்பிட்டார்.

இந்த கருத்தை இணையதளவாசிகள் பலரும் சமூகவலைதளங்களில் விமர்சித்தும், வரவேற்றும் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments